அயல் நாட்டிலே அப்பா வேலை....
அப்பத்தா, அம்மத்தா, தாத்தா
எல்லாம் எங்க ஊருல...
சித்தி, சித்தாப்பா, தம்பி எல்லாம்
போன்ல பேசுறாங்க, போட்டா அனுப்புறாங்க...
நானும் தான்..
நானும் தாத்தாவ பார்க்கும் போது பூ கொடுக்கனும்னு ரோசா பூ செடி வளர்க்குறேன்...
பாருங்க.. பூத்து வாடிருச்சு...
அப்பா..
எப்பப்பா தாத்தாவ தம்பிய பார்க்க கூட்டிட்டு போவ
Thursday, April 1, 2010
Monday, August 31, 2009
Tuesday, April 28, 2009
Monday, April 27, 2009
Sunday, April 26, 2009
கவிப்பேரரசு வைரமுத்து - காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்...
கையெழுத்து அழகாகும்.....
தபால்காரன் தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்...
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்...
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

திரை கவிஞர்களின் காதல் கவிதைகள்.
பறக்கத் தெரியும் திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு.
***
என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில் நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.
***
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!
***
காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!
***
கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!
***
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?
***
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?
***
இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.
***
இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.
***
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
காதல் ஓர்
இலவம் பஞ்சு.
***
என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில் நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.
***
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!
***
காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!
***
கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!
***
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?
***
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?
***
இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.
***
இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.
***
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
Friday, April 24, 2009
உம் என் அழகென்ன ? என் தொழில் என்ன ? ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு ?
காதலுக்கு எதுவும் தேவையில்லை என்பதை உணர்த்தும் பாடல்
எப்படி மறந்தார்கள் ?
Thursday, April 23, 2009
உணர்வாயா நீ…!
உணர்வாயா நீ…!
குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று
நான் உன்னை நேசிப்பதாய்.
என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!
இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்…
என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி
கணைகளை வீசும்.
என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்.
எப்போதாவது
என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ….?
உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது…?
விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.
உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்
இனியாவது தேடிக் கொள்வாயா…?
உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?
நட்போடு வலம் வரும் இவன்
Siva
Tuesday, April 21, 2009
நட்பும் காதலும்
எதிர்பாரமல் எதிர்பட்டுவிடுகிறது நட்பின் தொடக்கம்...
எதிர்பார்த்தும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது காதலின் முடிவு...
வீழ்ந்த போது எழுந்த வரிகள்
எதிர் நோக்கும் காலமே எதிர் காலம் -ஏட்டில் கற்றிருப்பாய்
உனை எதிர்கின்ற காலமே எதிர் காலம் - புதிய பொருள் உணர்வாய் ! வாழ்க்கையில் போராட்டம் - வாடிக்கை என்றிருப்பாய்
வாழ்க்கையே போராட்டம் -மெதுவாய் தான் நீ உணர்வாய்
வீழ்வாய் எழுவாய் பெருமை அடைவாய் மீண்டும்
வீழ்வாய் வீழ்வாய் வாழ்வில் பொறுமை இழப்பாய் !
வாழ்க்கை கடலில் உனக்காக சில புயல்கள் உருவாகும்
உனை வீழ்த்தி சிதைத்து பின் தானாக அது திசை மாறும்
ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் அது பழைய மொழி
முழம் சறுக்கி முட்டி உடையும் இது புதிய மொழி
கல்லெறிந்து காயம் செய்வான் பழங்களை அள்ளி செல்வான்
நீர் ஊற்றி காத்து நிர்ப்பாய் ஏமாற்றம் ஏந்தி நிர்ப்பாய்
நீ விழும் போது ஆறுதல் சொல்லி ஆறுதல் அடைவான்
எழுந்து நின்று நடந்து பார் உன் மேல் ஆத்திரம் அடைவான் !
உனை அடக்கி ஆள ஆயிரம் வழி அறிந்து வருவான்
உனை அக்றிணை போல் நடத்தி காட்ட யோசனை செய்வான்
முகமில்லா வெற்றிக்கு முகவரிகள் பல நூறு
முட்டி கால் உடையாம அதை அடைந்தது யார் நீ கூறு !
வெற்றி என்ன மணப்பெண்ணா அழகா அவளை கை பிடிக்க?
அடி வாங்கி விழுந்து எழுந்து போ திடமா அவளை நீ பிடிக்க !
வானவில் வெளுத்தாலும் உன் நிறத்தை நீ இழக்காதே
தோத்து போய் திரும்பி வந்தா மீண்டும் துரத்தி போக தவறாதே !
கடல் அலைகள் தூங்கினாலும் உன் கண்ணை மட்டும் மூடாதே
உனை வீழ்த்த சதி நடக்குது என்பதை நீ மறவாதே !
வெற்றி நுனி அடைந்த பின்னும் மனமே நீ அசராதே
தள்ளி விட ஒருவன் இருப்பான் நீயும் அதை மறுக்காதே !

Subscribe to:
Posts (Atom)